OUR CLIENTS
நேபாள பிரதமர் சர்மா ஒலி மனைவியுடன் இந்தியா வருகை
நேபாள பிரதமர் சர்மா ஒலி மனைவியுடன் இந்தியா வருகை Posted on 06-Apr-2018 நேபாள பிரதமர் சர்மா ஒலி மனைவியுடன் இந்தியா வருகை

புதுடெல்லி, ஏப்.6-
         நேபாள பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற சர்மா ஒலி மூன்று நாட்கள் பயணமாக தனது மனைவியுடன் இன்று இந்தியா வந்தடைந்தார்.  

நேபாள பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற சர்மா ஒலி மூன்று நாட்கள் பயணமாக தனது மனைவியுடன் இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எஸ்பி சுக்லா ஆகியோர் வரவேற்றனர்.

இன்று முதல் 8-ம் தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இந்தியா வருகை தந்த  அவர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், நேபாள மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து, நாளை குடியரசு தலைவர் மாளிகையில் ஒலிக்கு வரவேற்பு அளிக்கப்படும். அங்கு அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்.  வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Label