OUR CLIENTS
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா எம்.பி.க்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா எம்.பி.க்கள் போராட்டம் Posted on 06-Apr-2018 காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி, ஏப்.6

   காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம், ரயில் மற்றும் சாலை மறியலில் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு நேற்று  கடிதம் எழுதியிருந்தார். அதில், “காவிரி பிரச்சனையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நதிநீர் பங்கீட்டுக்கு ஒரு அமைப்பை அமைக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும்” என கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்,  இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடகா காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கம் முதலே காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடக அரசு, பா.ஜ.க உள்ளிட்ட அம்மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Label