OUR CLIENTS
துணைவேந்தரை நியமிக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது& தமிழிசை சவுந்தரராஜன்
துணைவேந்தரை நியமிக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது& தமிழிசை சவுந்தரராஜன் Posted on 06-Apr-2018 துணைவேந்தரை நியமிக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது& தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை, ஏப்.6&
        பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருக்கு உரிமை உள்ளது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில்   செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,  தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டும்.
தமிழக பல்கலைக்கழகங்களை காவியமயமாக்கவில்லை. கல்வி மயமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.  ஊழல் மயமாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை கல்வி மயமாக்குகிறோம். தமிழர்கள் பலர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி வகிக்கின்றனர். இஸ்ரோவின் தலைவராக தமிழர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், முறையாக மூன்று பேரை நேர்காணல் நடத்தியே கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது.  திறமைகளின் அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் ஊழல் இல்லை. சமூக நீதிக்குக் கேடும் இல்லை. பல்கலைக்கழகங்களுக்குள் அரசியலை புகுத்த வேண்டாம். துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருக்கு உரிமை உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிச்சயமாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.  திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளால் மறுக்கப்பட்ட காவிரி, பாஜக ஆட்சியில் தமிழகத்தில் பாய்ந்தோட போகிறது.  தமிழக உரிமைகளை தொலைத்த திமுக, மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்குகிறது.  மக்கள் உணர்வுகளோடு பாஜக நிற்கிறது. அதனை திசை திருப்புவதை பாஜக ஒப்புக்கொள்ளாது.  இவ்வாறு, தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Label