தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான்...! - தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு Posted on 06-Apr-2018
சென்னை, ஏப்.6-
தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரன் பெசன்ட்நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரிக்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக ஐபிஎல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தமிழக அரசு அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறது என்றும் தினகரன் வேண்டுகோள் விடுத்தார். ஆட்சியில் இருந்தால் மட்டும் போதும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியல்ல, கவர்னர் ஆட்சிதான் என்றும் தினகரன் குற்றம்சாட்டினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தகுதியான ஆட்கள் தமிழகத்தில் இல்லையா என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறம்தான் ஆட்சி செய்யும் என ஜெயக்குமார் கூறியது தங்களைதான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.