OUR CLIENTS
தமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Posted on 06-Apr-2018 தமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்



சென்னை, ஏப்.6-
 அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்திருப்பது தமிழகத்தின் தன்மானத்தின் மீதான தாக்குதல் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமிக்கக் கூடாது என்பது கல்வியாளர்களின் வலியுறுத்தல். ஆனால் இதைப்பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல் கர்நாடகா சூரப்பாவையே துணைவேந்தராக நியமித்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.    ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

 நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Label