OUR CLIENTS
பா.ம.க. முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பா.ம.க. முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Posted on 08-Apr-2018 பா.ம.க. முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு   மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஏப்.8-
   
11ம் தேதி நடக்கும் பா.ம.க. முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 11ம் தேதி (புதன்கிழமை) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், அரசியல் பாகுபாடின்றி தமிழகத்தின் ஒருமித்த குரல் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற முழு அடைப்புப் போராட்டத்திற்கு, தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label