OUR CLIENTS
30 கோடி தலித்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை! பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம்
30 கோடி தலித்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை! பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம் Posted on 08-Apr-2018 30 கோடி தலித்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை! பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம்

காசியாபாத், ஏப்.8-

 கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு 30 கோடி தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை என உத்தர பிரதேச மாநில பாஜக தலித் எம்.பி. யஷ்வந்த் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் இருவர், நாட்டில் தலித்துகள் மீதான தார்மீக நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் மூலம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், உ.பி. மாநிலம் நாகினா தொகுதி பாஜக தலித் எம்.பி.யான யஷ்வந்த் சிங் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.  தலித் சமூக எம்.பி. என்பதால் எனது திறமைகளை கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. இடதுஒதுக்கீடு காரணமாகவே நான் தற்போது எம்.பி.யாக உள்ளேன். பாஜகவால் எனது தொகுதியில் நான் வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் உள்ள 30 கோடி தலித் மக்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு எதையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். .

எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலித் மக்களின் உரிமையை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.  தலித்தாக இருப்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் யஷ்வந்த் சிங் கூறியுள்ளார். இந்த கடிதத்தால் மத்திய ஆளும் பாஜகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  பிரதமருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ள 3வது பாஜக தலித் எம்.பி. யஷ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அதனுடைய 38வது நிறுவன தினத்தை கொண்டாடும் நிலையில், எடவாவின் பாஜக தலித் எம்.பி., அசோக் குமார் தொஹரே தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். 

தோஹ்ரே ஏப்ரல் 2ஆம் தேதி பாரத் பந்த் தினத்தன்று தலித்துகளுக்கு எதிராக காவல்துறை மிருகத்தனமான தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார். தலித் இளைஞர்களை அவர்களது வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று துன்புறுத்திக் கொன்றதற்கு கண்டனம் தெரிவித்தார்.  

இதே போன்று, ராபர்ட்ஸ் கஞ்சை சேர்ந்த தலித் எம்பி. சோட்டே லால் கர்வார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களை நடத்தி வருவதாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். 
யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்ற போது, அலுவலகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் முதல்வர் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

Label