OUR CLIENTS
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ், மனு பேகருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ், மனு பேகருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து Posted on 09-Apr-2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ், மனு பேகருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி, ஏப்.8- 
        ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமல்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற பூனம் யாதவ் மற்றும் மனு பேகருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

ஆஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டி நடந்து வருகிறது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர்.
இந்நிலையில், காமல்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற பூனம் யாதவ், மனு பேகர் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில், 69 கிலோ பளுதூக்குதல் போட்டியில் பூனம் யாதவ் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு பெரிய வாழ்த்துக்கள். காம்ன்வெல்த் போட்டியில் நமது பளுதூக்குதல் வீரர்களில் வெற்றி தொடர்கிறது. காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதலில் இரட்டை வெற்றி பெற்ற நமது துப்பாக்கிச்சுடுதல் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில், மகளிருக்கான பளுதூக்குதல் 69 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பூனம் யாதவை இந்தியா வாழ்த்துகிறது. பளுதூக்குதலில் அவரது ஈடுபாடு பாராட்டுக்குறியது. காமன்வெல்த் போட்டியில் நமது துப்பாக்கிச்சுடும் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். மனு பேகர் அவரது திறமையை மீண்டும் காட்டி, 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார், என கூறியுள்ளார். 

Label