OUR CLIENTS
ஐஆர்என்எஸ்எஸ்-1 தொலையுணர்வு செயற்கைக்கோளை வெண்ணில் செலுத்தியது இஸ்ரோ
ஐஆர்என்எஸ்எஸ்-1 தொலையுணர்வு செயற்கைக்கோளை வெண்ணில் செலுத்தியது இஸ்ரோ Posted on 12-Apr-2018 ஐஆர்என்எஸ்எஸ்-1 தொலையுணர்வு செயற்கைக்கோளை வெண்ணில் செலுத்தியது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா, ஏப்.12-

    ஐஆர்என்எஸ்எஸ்-1 தொலையுணர்வு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி41 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடல்சார் ஆராய்ச்சிகளுக்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையிலான தொலையுணர்வு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டு வரும் வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி-சி41 ரக ராக்கெட் இன்று அதிகாலை சரியாக 4.04 மணிக்கு சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. செலுத்தப்பட்ட 19 நிமிடங்களில் அந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதையை எட்டியது.

பெங்களூரில் உள்ள ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் உருவாக்கிய 1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த செயற்கைக் கோளில் இருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் புளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்களால் அறிந்துகொள்ள முடியும்.

கடல்சார் கண்காணிப்பு, சாலை மற்றும் வான்வழி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இந்த செயற்கைக்கோள் உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Label