OUR CLIENTS
மக்களை வேவு பார்க்கும் வேலையில் ஈடுபடும் மத்திய அரசு! செட் ஆப் பாக்ஸில் ‘சிப்’ பொருத்தும் திட்டதுக்கு காங்கிரஸ் கண்டனம்
மக்களை வேவு பார்க்கும் வேலையில் ஈடுபடும் மத்திய அரசு! செட் ஆப் பாக்ஸில் ‘சிப்’ பொருத்தும் திட்டதுக்கு காங்கிரஸ் கண்டனம் Posted on 17-Apr-2018 மக்களை வேவு பார்க்கும் வேலையில் ஈடுபடும் மத்திய அரசு! செட் ஆப் பாக்ஸில் ‘சிப்’ பொருத்தும் திட்டதுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி, ஏப்.17-

தொலைக்காட்சி செட் ஆப் பாக்ஸில் ‘சிப்’ பொருத்துவதன் மூலம் மக்களை வேவு பார்க்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சியில் மக்கள் எந்த நிகழ்ச்சியை அதிக நேரம் காண்கிறார்கள் என்பதை அறிவதற்காக, செட்- டாப் பாக்ஸ் கருவியில் ‘சிப்’ பொருத்துவது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.  தனியார் ஆய்வு நிறுவனங்கள் மட்டுமே தகவல்களை திரட்டி வரும் நிலையில் அரசுக்கும் இந்த தகவல்களை திரட்டுவதற்காக இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.  ஆனால் இது மக்களை வேவு பார்க்கும் நடவடிக்கை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும் அரசியல் ரீதியாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ள பாஜக முயலும் என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:  மத்தியில் ஆளும் பாஜக அரசு அடுத்த வேவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தனிநபர் உரிமையை மீறி செயல்படுகிறது. தனிநபர் ரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.  நான்கு சுவர்களுக்குள் நடப்பதை, படுக்கை அறைக்குள் சென்று பார்ப்பது அரசின் கடமை அல்ல. எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விரும்புகிறார். ஆனால் அரசின் நோக்கம் அதுமட்டுமல்ல.   இவ்வாறு ட்விட்டரில் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு தொலைக்காட்சியையும் எவ்வளவு பேர் காண்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டமானது, விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு, எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்பது தொடர்பான முடிவை எடுக்க உதவியாக இருக்கும் என்றார்.

Label