OUR CLIENTS
போக்குவரத்து கழகத்தில் பணி வழங்காததை கண்டித்து சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம்
போக்குவரத்து கழகத்தில் பணி வழங்காததை கண்டித்து சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் Posted on 17-Apr-2018 போக்குவரத்து கழகத்தில் பணி வழங்காததை கண்டித்து சாகும் வரை  தொடர் உண்ணாவிரத போராட்டம்

மார்த்தாண்டம், ஏப்.17-

 கேரளாவில் போக்குவரத்து கழகத்தில் பணி வழங்காததை கண்டித்து, சாகும் வரை இளம்பெண் மற்றும் வாலிபர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் 4 ஆயிரத்து 264 தற்காலிக பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருவதாகவும், இதனால் தகுதியின் அடிப்படையில் பணி கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

 கேரள மாநில பிஎஸ்சி போக்குவரத்துக்கழக கண்டக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்த பின்பும் ரேங்க் லிஸ்டில் இடம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறி  கேரள மாநில கண்டக்டர் பிஎஸ்சி ரேங்க் ஹோல்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததை தொடர்ந்து கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த பிருந்தாதேவி (31) திருவனந்தபுரம் அருகே கல்லிங்கம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (28) என்ற இரண்டு பேரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா. 3 நாட்களாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. வேலை வழங்கு இல்லாவிடில் மரணம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் போராட்ட பந்தலில் இடம் பெற்றுள்ளன. போராட்டக்காரர்களுக்கு முன் மலர் வளையம் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கண்டக்டர் ரேங்க் லிஸ்ட் ஹோல்டர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். வேலை கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label