OUR CLIENTS
நிர்மலா விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன் பதிலடி
நிர்மலா விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன் பதிலடி Posted on 17-Apr-2018 நிர்மலா விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன் பதிலடி

சென்னை, ஏப்.17-

தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது அமைச்சர் அன்பழகன் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும்  கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தும் வகையில் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அதிகாரிகளை அனுசரித்து சென்றால், மதிப்பெண் மற்றும் பணம் ஆகியவை தருவதாக  நிர்மலா தேவி பேசிய ஆடியோ வைரலானது.  இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. எனவே பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.

பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.  ஆளுநரின் இந்த உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தும். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என ஸ்டாலின் கூறி இருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்  எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் சட்டப்படி இந்த அரசு அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அன்பழகன் உறுதியாக தெரிவித்தார். 

 

Label