OUR CLIENTS
நிதிக்குழு தலைவருடன் துணைமுதல்வர் சந்திப்பு
நிதிக்குழு தலைவருடன் துணைமுதல்வர் சந்திப்பு Posted on 20-Apr-2018 நிதிக்குழு தலைவருடன் துணைமுதல்வர் சந்திப்பு

புதுடெல்லி, ஏப்.20-

       தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்தினோம் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

        மத்திய அரசின் 15 ஆவது நிதிக்குழுவின் தலைவர் என்.கே.சிங் மற்றும் உறுப்பினர் சக்தி காந்த தாஸ் (இ.ஆ.ப ஒய்வு) ஆகியோரை தமிழ்நாடு அரசின் துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுடெல்லி ஜவஹர் வியாபார் பவனில் அமைந்துள்ள 15 ஆவது நிதிக்குழு அலுவலகத்தில்  நேற்று சந்தித்தார்.
15வது நிதிக்குழு தலைவர் கே.என். சிங்-ஐ, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்தித்துப் பேசிய. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசை வலியுத்தினோம். 2011 மக்கள் தொகை கணக்கின்படி மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

     மத்திய நிதித்துறை தலைவரிடம் தமிழகத்தின் கோரிக்கையை தெரிவிப்போம். தமிழகத்தின் கோரிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறினார்.
நிதிக்குழு தலைவருடன் துணை முதல்வர் சந்தித்தபோது, அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்ரேயன், விஜிலா சத்யானந்த், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர். பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் கே. சண்முகம், தமிழ்நாடு அரசின்  திட்டத்துறை முதன்மை செயலாளர்  டி.வி.சோமநாதன்.

         தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர்மிமி  என்முருகானந்தம், மற்றும்  துனை முதலமைச்சரின் துணைச் செயலாளர் சந்திரசேகர் சாகமூரி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Label