OUR CLIENTS
தரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்!
தரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்! Posted on 20-Apr-2018 தரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்!

பெண் நிருபர்கள் பற்றி விமர்சனம்

தரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு
நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்!

மன்னிப்பும், விளக்கமும் ஏற்புடையது அல்ல!&ஜனநாயக படுகொலை!!


சென்னை, ஏப்.20-
பெண் பத்திரிகையாளர் களையும் ஒட்டு மொத்த மீடியாக்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் அகில இந்திய தலைவர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார். அந்த பெண் நிருபரும் அதை ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மன்னிப்பு கோரியதை செய்தியாளர்கள் வரவேற்று நன்றி தெரிவித்தனர். 

செய்தியாளர்கள் அரசியலுக்கு அப்பார்பட்டவர்கள், சமூக நீதிகளுக்கு உட்பட்டவர்கள், அவர்களை அரசியல் அடிப்படையில் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் தரம் தாழ்ந்து, அருவருக்கத்தக்க கருத்தை பதிவிட்டது கடும் கண்டனத்துக்கு உரியது.   

பெண்கள் நாட்டின் கண்கள்  என்று நம்மூதையர்கள், அறிஞர்கள் கூறிவைத்தனர். தாய் தந்தை, குரு தெய்வம் என்ற வரிசையிலும் தாய் என்ற பெண்மைக்குதான் முதலிடம். இயற்கையையும் பெண்ணுடன்தான் ஒப்பிடுகின்றனர்.  "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற நாமக்கல் கவி கூறினார்.

சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களோ அந்த சமூகமே சிறந்த சமூகமாகும். அப்படி பெண்மை போற்றும் நாட்டில், மிகவும் கீழ்தரமான கருத்துகளை பகிர்ந்த, எஸ்.வி.சேகரின் தரம் தாழ்ந்த மனநிலையையும் அவருடைய ஆணாதிக்கத்தையும் காட்டுகிறது. அவர் வீட்டு பெண்களே இக்கருத்தை ஏற்க மறுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 

ஊடகத் துறையில் உள்ள பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த ஊடகத்துறையை கேவலப்படுத்திய பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் கருத்து, வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.   மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற பதிவுகளை போட்டு விட்டு கண்டனம் எழுந்ததும் நீக்குவது தொடர்கதையாகி வருகிறது. எஸ்.வி.சேகர் என்ற நடிகரை இந்த உலகத்துக்கு கொண்டு சென்றதும் ஊடகத்துறை என்பதை அவர் மறந்துவிட கூடாது. 

ஊடகத் துறையில் பணிபுரிவது வேலையல்ல அது ஒரு சேவை என்பதை எஸ்.வி.சேகருக்கு சுட்டிகாட்டுகிறோம்.   நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறைதான் மற்ற மூன்று தூண்களை இணைக்கும் பாலமாக உள்ளது என்பதை உணரவேண்டும். எஸ்.வி.சேகருடைய கருத்து ஒட்டு மொத்த ஜனநாயக படுகொலையாகும். 

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழகுதான். அப்படி இருக்கையில் ஒருவரின் முகத்தை  விமர்சனம் செய்ய எஸ்.வி.சேகருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை விளக்கவேண்டும்.

படிப்பறிவில்லாத ஒருவரால் ஊடகத்துறையில் சேவையாற்ற முடியுமா? என்பதை சிந்துத்து பதிலளிக்கவேண்டும். விபத்து, கலவரம் எதுவாகிலும் அங்கு முதலில் இருப்பது செய்தியாளர்களே-. உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல்தான் சேவைபுரிகின்றனர். இதை உணராமல் தான்தோன்றிதனமாக பெண் செய்தியாளரை தரம் தாழ்த்தி பேசியதும், ஒட்டுமொத்த ஊடகத்துறையை இழிவுப்படுத்தியதும் கடுமையாக கண்டிக்க தக்கது. அவருடைய மன்னிப்பும், விளக்கமும் ஏற்புடையது அல்ல. இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

பெண்களை இழிவுபடுத்திய எஸ்வி சேகர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஒட்டுமொத்த ஊடகத்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.  

இவ்வாறு, நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் அகில இந்திய தலைவர் கா.குமார்  தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Label