OUR CLIENTS
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி&நடிகர் ரஜினிகாந்த்
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி&நடிகர் ரஜினிகாந்த் Posted on 24-Apr-2018 அரசியல் கட்சி தொடங்குவது உறுதி&நடிகர் ரஜினிகாந்த்

சென்னை, ஏப்.24-

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சீருடையில் உள்ள காவலர்களை தாக்குவது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அதே நேரத்தில் காவல்துறையினர் வரம்பு மீறி செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சி தொடங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட ரஜினி, அரசியலில் விமர்சனம் தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார். பெண் பத்திரிகையாளர்களை எஸ்வி சேகர் இழிவாக விமர்சித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் கூறினார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ரஜினி வலியுறுத்தினார். ஆடிட்டர் குருமூர்த்தி தமது நீண்டகால நண்பர் என்றும், அவரை சந்திப்பது வாடிக்கையானது என்பதால் இதில் விசேஷம் எதுவும் இல்லை என்றும் ரஜினி விளக்கம் அளித்தார்.  மருத்துவ சிகிச்சைக்காக இரவு அமெரிக்கா செல்லும் ரஜினி, 10 நாட்களுக்கு பின் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

Label