OUR CLIENTS
காங்கிரஸ் கட்சியுடன் இனி எப்போதும் தேர்தல் கூட்டணி இல்லை...!
காங்கிரஸ் கட்சியுடன் இனி எப்போதும் தேர்தல் கூட்டணி இல்லை...! Posted on 24-Apr-2018 காங்கிரஸ் கட்சியுடன் இனி எப்போதும் தேர்தல் கூட்டணி இல்லை...!

ஹைதராபாத், ஏப்.24-

இனி எந்த தேர்தலுக்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி கிடையாது என்று இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது. இறுதிநாள் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலாளைரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது.
இதில், திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், ஆட்சி மன்றக் குழு பிருந்தா காரத், செயலாளர் பி.பி.ராகவலு உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. தற்போதைய தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரியின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. பாஜகவை எதிர்பதற்காக, காங்கிரஸுடம் கூட்டணி வைக்க முயன்ற சீதாராம் யெச்சூரிக்கு சில மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தயக்கம் காட்டினர். இதனையடுத்து, காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து போட்டியிடலாம் என்கிற வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, சீதாராம் யெச்சூரியை மீண்டும் பொதுச்செயலாளராக்க, மத்தியக் குழு உறுப்பினர்கள் 95 பேரும் ஆதரவளித்தனர். 

எனவே, 2வது முறையாக யெச்சூரி மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீதாராம் யெச்சூரி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலங்களில் கள நிலவரத்தைப் பொறுத்து மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் கூட்டணி அமைக்கும். 
காங்கிரஸுடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது. அதேநேரம், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வகுப்புவாத சக்திகளின் ஆதிக்கத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்தும் வகையில், புரிந்துணர்வு அடிப்படையில் செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Label