OUR CLIENTS
நிர்மலாதேவி விவகாரம் பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை- தொல்.திருமாவளவன்
நிர்மலாதேவி விவகாரம் பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை- தொல்.திருமாவளவன் Posted on 24-Apr-2018 நிர்மலாதேவி விவகாரம் பெண்  நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை- தொல்.திருமாவளவன்

சென்னை , ஏப்.24-

நிர்மலாதேவி விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு தாயாக இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பேராசிரியர் தவறான பாதைக்கு அழைத்த சென்ற அநீதியை காணும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.  அவர் மட்டுமல்ல பின்னால் பெரிய சக்திகள் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு இருப்பதாக அவர் நம்புவதாக தெரிகிறது என்றும் திருமாவளவன் கூறினார்.  இதன் பிண்ணனியை அறிய கவர்னர் நியமித்த சந்தானம் விசாரணை ஆணையம் பயன்படாதது. தமிழக அரசின் சிபிசிஐடி விசாரணையும் பயன் தராது.

ஒரு பெண் நீதிபதி தலைமையில் பெண் உறுப்பினர்கள் கொண்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி நடைபெறுகின்ற மாணவிகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதன்பின்னர் மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ளது. சாதாரண மக்களால் தொட முடியாத இடத்திற்கு விலை சென்று உள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாகி விடும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கட்டுபாட்டில் இருக்கும்போது பெட்ரோல், டீசல் விலையும் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.  ஆனால் அதற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அடிக்கடி விலை உயர்த்தி கொள்ளை லாபம் அடிக்கின்றனர். மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கூறினார்.

மேலும், சென்னையில் தலித் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வன்கொடுமை அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று கவர்னரை சந்தித்து மனு தர இருப்பதாகவும் அவர் கூறினார். பாரதிய ஜனதா ஆளாத மாநிலங்களை வஞ்சித்து வருகிறது. தென்னிந்திய மாநிலங்களில் வழங்க வேண்டிய நிதியை கூட வழங்கவில்லை. இதில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள அரசுகள் ஒன்று கூடி விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Label