OUR CLIENTS
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்!
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்! Posted on 24-Apr-2018 உள்ளாட்சி தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்!

சென்னை, ஏப்.24-

தமிழ்நாட்டில், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும், மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அதன் நிறுவனர் கமல்ஹாசன் தலைமையில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுவதில்லை என்றார். வருடத்தில் நான்கு முக்கிய நாட்களில் கிராம சபைகள் நடந்தே ஆக வேண்டும் என்றும் ஆனால், எதார்த்தத்தில் அவ்வாறு நடைபெறுவது இல்லை என்று கமல்ஹாசன் கூறினார். உயிரைக்கொடுத்து தொழிற்சாலையை வளர்க்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிராமத்திற்கு இல்லை என கமல்ஹாசன் தெரிவித்தார். தன்னை எறும்பு என சிலர் கூறுவதாகவும், அப்படியான எறும்பு, யானை காதுக்குள் சென்றால் என்ன ஆகும்? என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார். 

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்த கமல்ஹாசன், உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் கேட்டுக்கொண்டார்.  பாலியல் சுரண்டலுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கமல்ஹாசன், பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தவறு செய்தது  யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Label