OUR CLIENTS
கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை கண்டு வாக்காளர்கள் பிரமிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை கண்டு வாக்காளர்கள் பிரமிப்பு Posted on 25-Apr-2018 கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை  கண்டு வாக்காளர்கள் பிரமிப்பு

பெங்களூரு, ஏப். 25-

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியலை கண்டு வாக்காளர்கள் பிரமித்து உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா பிரசாரம் செய்து வருகிறது.கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, பாரதிய ஜனதா கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா, மதசார்பற்ற ஜனதா தள முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சொத்து பட்டியலை கண்டு வாக்காளர்கள் பிரமித்து உள்ளனர்.மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா, தனக்கு ரூ.11.2 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பணம், நகைகள் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அவருக்கு ரூ.2 கோடியும், அவரது மனைவி பார்வதிக்கு ரூ.7.6 கோடியும், குடும்பத்தினருக்கு ரூ.1.6 கோடியும் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிட்ட போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ரூ.5.16 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது அவரது சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரித்து உள்ளது.ஷிகாரிப்புரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கள், ரூ.54 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் உள்பட ரூ.7.6 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பை காட்டிலும் தற்போது அவரது சொத்து மதிப்பு 70 சதவீதம் குறைந்துள்ளது.மதசார்பற்ற ஜனதா தள கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமி ராம்நகர், சென்னப்பட்னா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு மொத்தமாக ரூ.167 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். அதில் அவரது மனைவி அனிதா குமாரசாமிக்கு ரூ.124.2 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.கோலார் மாவட்டத்தில் உள்ள ஹொசகோட்டை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜூக்கு ரூ.907 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

வருமான வரி சோதனையில் சிக்கிய கர்நாடக மின்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டத்தில் உள்ள கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு மொத்தமாக‌ ரூ.730 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது.பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் அனில் குமார் (43) தனக்கு ரூ.339 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.கேரளாவை சேர்ந்த இவர் பிழைப்பு தேடி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருக்கு வந்தார். டீக்கடையில் வேலை செய்து பின்னர் 2000-ம் ஆண்டில் சொந்தமாக கடை தொடங்கினார். வியாபாரத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து ரூ.339 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்து உள்ளார். இவரிடம் 16 கார்கள் மற்றும் 6 பங்களாக்கள் உள்ளன.

Label