OUR CLIENTS
பள்ளி எதிரில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலம் அமைத்திட கிராம மக்கள் கோரிக்கை
பள்ளி எதிரில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலம் அமைத்திட கிராம மக்கள் கோரிக்கை Posted on 25-Apr-2018 பள்ளி எதிரில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலம் அமைத்திட கிராம மக்கள் கோரிக்கை

வாணியம்பாடி, ஏப்.25&-

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் தேசிய ஊராட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபா கூட்டம்  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி செயலாளர் உமாசங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மாதனூர் ஒன்றியத்தில் உள்ள 9 பஞ்சாயத்துக்களில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசின் திட்டங்களான பசுமை வீடு ,பாரத பிரதமர் வீடு திட்டம் மற்றும் அனைவருக்கும் இலவச கழிப்பிடம் உள்ளிட்ட திட்டங்களை பயனுள்ள பயணாளிகள் பயன்படுத்தி கொள்ளவும்,டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக ஒழிக்க வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் வைத்துள்ள தேவையற்ற பொருட்களை அப்புறபடுத்தி தண்ணீர் தேங்காமல் வைத்து கொள்ளவேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 பின்னர் மாதனூர் சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் மதன்சிங் மற்றும் பிச்சாண்டி ஆகியோர் கோடை வெயிலினால் நீர் சத்து குறைவதால் உயிர் சேதம் ஏற்படும் நிலைமை வராமல் பாதுகாத்து கொள்ளவேண்டும் .இதற்காக வெயில் நேரத்தில் வெயிலில் செல்லவேண்டாம் எனவும் அதிகமான குளிர்பானங்களையும் மருத்துவமனையில் வழங்கும் ஒ.ஆர்.எஸ் பவுடரை வாங்கி பருக வேண்டும் என கேட்டு கொண்டனர் .மேலும் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி எதிரில் செல்லும் தரைப்பாலம் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி மேம்பாலம் அமைக்கவேண்டும்.அணைத்து வீதிகளுக்கும் சிமென்ட் சாலை அமைப்பது , 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் கிராம மக்கள் ஊரக வளர்ச்சி திட்ட பணியாளர்கள் என பலர் கலந்து கொணடனர். 

Label