OUR CLIENTS
தமிழக அரசு கட்டுப்பாட்டில் தலைமை தேர்தல் அதிகாரி நீடிக்கக் கூடாது
தமிழக அரசு கட்டுப்பாட்டில் தலைமை தேர்தல் அதிகாரி நீடிக்கக் கூடாது Posted on 25-Apr-2018 தமிழக அரசு கட்டுப்பாட்டில் தலைமை தேர்தல் அதிகாரி நீடிக்கக் கூடாது

சென்னை, ஏப்.25-

தமிழக அரசு கட்டுப்பாட்டில் தலைமை தேர்தல் அதிகாரி நீடிக்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
 பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:  தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாகு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நீடிக்கிறார். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்பது மட்டுமின்றி, தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியின் நம்பகத்தன்மையையும் சீர்குலைத்து விடும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அமர்த்தப்பட்ட ஒருவரை, சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பதவியையும் கூடுதலாக வழங்கி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.  சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு அவரது சேவை கண்டிப்பாகத் தேவைப்படுவதாகவும், இதற்காக அடுத்த 3 மாதங்களுக்கு அவரை மாநில அரசு பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாகவும், அதை ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வ மற்ற வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யப்பிரதா சாகு இது வரை எந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர் என்பது உண்மைதான். ஆனால், அவரை இயக்குபவர்கள் நேர்மையற்றவர்கள் என்பதால், அவர்கள் விருப்பப்படி செயல்படுபவர்களையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பவர்கள் தமிழகத்தைச் சேராதவர்களாக மட்டுமின்றி, தமிழகத் தொகுப்பைச் சேராதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதுபற்றி 

Label