OUR CLIENTS
தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் Posted on 25-Apr-2018 தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

சென்னை, ஏப்.25-

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட  200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். 

சென்னை சின்னமலை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசு மற்றும் ஆளுனருக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  அதில், பேராசிரியர்  நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே அவரே விசாரணை குழு நியமிப்பது ஏற்புடையதல்ல எனவும் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்வது சந்தேகம் ஏற்படுத்துகிறது எனவும் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக  ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்மட்ட குழு விசாரணை அவசியம் எனவும்  அவர் நியமித்த சந்தானம் குழுவை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில்  ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறை தடுத்ததால் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் ஜி. ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியும் பங்கேற்றார்.

Label