OUR CLIENTS
கிராம சபை குறித்த கமலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - எஸ்.பி.வேலுமணி
கிராம சபை குறித்த கமலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - எஸ்.பி.வேலுமணி Posted on 25-Apr-2018 கிராம சபை குறித்த கமலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - எஸ்.பி.வேலுமணி

சென்னை, ஏப்.25-

கிராம சபை முறையாக கூட்டுவதில்லை என்று கமல் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் மேலா சிறப்பாக தொடங்கி மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மண்டல அளவில் விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும், 32 மாவடங்களில் இருந்து மகளிர் குழுக்கள் இங்கு வந்து 52 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடை வகைகள், மண்பாண்டங்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.  

தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் மே 24-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைப்பெற உள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடைப்பெற்ற கண்காட்சியில் 55.34 லட்சம் ரூபாய்க்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்காக 44 கோடி வங்கி கடன் வழங்கியுள்ளனர். நலத்திட்ட உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக பதவியேற்று கொண்டதற்கு காரணம் என்ன என வெற்றிவேல் கருத்துக்கு இது கேட்டு கேட்டு புளிச்சிபோன கதை என தெரிவித்தார்.  மேலும், தினகரனுக்கு திவாகரனுக்கு தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறதே என்றதற்கு அங்கு நாடகம் அரங்கேறி வருகிறது. இது பங்காளி சண்டை, அவர்கள் குடும்ப விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே எங்கள் எண்ணம் எனவும் ஜெயக்குமார் கூறினார்.

Label