OUR CLIENTS
நான் எறும்புதான், யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்? ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி!
நான் எறும்புதான், யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்? ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி! Posted on 25-Apr-2018 நான் எறும்புதான், யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்?  ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி!

சென்னை, ஏப்.25-

நான் எறும்பு தான், யானையின் காதுக்குள் புகுந்தால் என்ன ஆகும்? என அமைச்சர் ஜெயக்குமாருக்கு மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  “கமல் எங்கே இருக்கிறார்? அவர் திடீரென்று ட்விட்டரில் வருவார். இல்லை என்றால் பேஸ்புக்கில் வருவார்; யூட்யூபில் வருவார். இனிமேல் எஸ்.எம்.எஸ்ஸில் தான் வருவார். சுருக்கமாக சொல்வதென்றால், என்னமோ  தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே. அதுபோல கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி பின்னர் அரசியலில் இருந்து காணாமலே போய் விடுவார்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்திருந்தார்.

இதற்கு, மாதிரி கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பதிலளித்தார். அதில் “என்னை எறும்பு என்று சில பேர் சொல்கிறார்கள். யானை காதில் எறும்பு போனால், என்ன ஆகும்? நான் எறும்பு என்று ஒத்துக்கொள்கிறேன். அதற்காக நீங்கள் யானை என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன மிருகம் என்னவென்று நாங்கள் முடிவு செய்து வைத்துவிட்டோம். உங்கள் காதில் போக வேண்டுமா? போக கூடாதா? என்பதை  சுத்தம் கருதி நாங்கள் முடிவு செய்துகொள்வோம்” என தெரிவித்தார். மேலும் இது போன்ற வார்த்தை ஜாலங்கள் எல்லாம் முடிந்துவிட்டது, இது செயல்படும் நேரம் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

Label