OUR CLIENTS
தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு Posted on 25-Apr-2018 தமிழகம் மற்றும் புதுவையில்  மழை பெய்ய வாய்ப்பு

 சென்னை, ஏப்.25-

வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடலில் ஏற்பட்ட தொலைத்தூர சலனங்களால் தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் நிலவி வருகிறது. இதனால்  கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கடலில் அலைகள் 2.மீட்டர் வரை அதிகமாக இருக்கும் என்றும் இதனால் அந்த பகுதியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  அதே நேரத்தில் அந்தமான் மற்றும் கேரள கடல் பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும் எனவே அந்தமான், கேரள பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 28டிகிரி செல்சியல் வரை பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Label