OUR CLIENTS
தமிழக மையங்களில் நீட் தேர்வு எழுத அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
தமிழக மையங்களில் நீட் தேர்வு எழுத அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு Posted on 26-Apr-2018 தமிழக மையங்களில் நீட் தேர்வு எழுத  அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை, ஏப்.26-

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுத விரும்பும் தமிழக மாணவர் தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கலியமுத்து மைலவன் இதற்கான மனுவைத் தாக்கல் செய்தார்.

வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு விவரம்: மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2018-2019 கல்வி ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.
இந்த தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு எழுத உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் திருச்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் விதிகளின் படி நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள மையங்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தற்போது அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது சட்ட  விரோதமானது.

இதுகுறித்து சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள  அறிவிப்பில், தேர்வு மைய ஒதுக்கீட்டில் மனித குறுக்கீடுகள் எதுவும் இல்லை. இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் கணினி மூலம் ஒதுக்கப்பட்டவை, எனவே ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாற்றி அமைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிபிஎஸ்இ யின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Label