OUR CLIENTS
மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணி மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு
மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணி மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு Posted on 26-Apr-2018 மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணி மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு

சென்னை, ஏப்.26-

மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்க மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி எடுத்துவரும் முயற்சிக்கு திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார். 
திமுக, பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார். 
இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று  தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில கட்சிகளின் ஒற்றுமை மற்றும் மத்திய அரசுடன் பலமான நட்புறவுக்கு தி.மு.க. எப்போதுமே துணையாக நின்றுள்ளது. பா.ஜ.க.வின் சர்வாதிகார ஜனநாயகவிரோத ஆட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் பெருமுயற்சிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார். 
அவரது பதிவுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். எங்களது முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Label