OUR CLIENTS
மும்பைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கக்கட்டிகள்
மும்பைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கக்கட்டிகள் Posted on 26-Apr-2018 மும்பைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கக்கட்டிகள்

மும்பை, ஏப். 26-

துபாயில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில், இருக்கையில் மறைந்து வைக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்த 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

துபாயில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், விமான புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், இரண்டு இருக்கைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 9 கிலோ தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

உரிமம் கோரப்படாத அந்த  தங்கக்கட்டிகள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இருக்கைகளில் பயணித்த பயணிகளை சந்தேகிப்பதாகவும், உள்நாட்டு பயணத்துக்கு விமானம் ஈடுபடுத்தப்படும் போது, தங்கக்கட்டிகளை எடுக்க அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Label