OUR CLIENTS
இலவச வீடுகளில் பிரதமர் மோடி உருவம்
இலவச வீடுகளில் பிரதமர் மோடி உருவம் Posted on 26-Apr-2018 இலவச வீடுகளில் பிரதமர் மோடி உருவம்

போபால், ஏப். 26-

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இலவச வீடுகள் கட்டும் திட்டத்தில், பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உருவம் பொறித்த டைல்ஸ்கள் வீடுகளில் பதிக்கப்பட உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது. 

மொத்தம் 2.86 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளில் முன்பகுதியில் உள்ள முகப்பிலும், சமையல் அறையிலும் பிரதமர் மோடி மற்றும் முதல்-வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உருவம் பொறித்த செராமிக் டைல்ஸ் பதிக்கப்படுகிறது. வீட்டின் முகப்பில் ஒன்றும், சமையல் அறையில் ஒன்றுமாக 2.86 லட்சம் வீடுகளிலும் பதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label