OUR CLIENTS
வட இந்திய தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்கும் பா.ஜ.க.
வட இந்திய தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்கும் பா.ஜ.க. Posted on 26-Apr-2018 வட இந்திய தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்கும் பா.ஜ.க.

பெங்களூரு, ஏப். 26-

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு வட இந்தியாவில் இருந்து மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்களை பா.ஜ.க. இறக்குமதி செய்வதாக சித்தராமையா கிண்டலடித்துள்ளார்.

காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். பா.ஜ.க.வை ஆதரித்து  உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்துவருகிறார். பிரதமர் மோடி 1-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, “பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற வடஇந்திய தலைவர்களை இறக்குமதி செய்ய கர்நாடக பா.ஜ.க. காத்திருக்கிறது. இதன்மூலம், மாநிலத்தில் அவர்களுக்கு தலைவர்களே இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அத்துடன் அவர்களின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை டம்மி ஆக்கி இருக்கிறார்கள்” என கிண்டலாக கூறியிருந்தார். 
பிரதமர் இங்கு வந்து போகலாம். ஆனால், இங்கு எனக்கும் எடியூரப்பாவுக்கும் இடையில்தான் போட்டி. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அந்த கட்சிக்கு (பா.ஜ.க.) தெரியும்’ என்றும் சித்தராமையா கூறியிருந்தார்.சித்தராமையாவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவை வடக்கு தெற்கு என பிரிக்க சித்தராமையா முயற்சிப்பது வெறுக்கத்தக்க செயல் என்றும், சொந்த தொகுதி மக்களே அவரை நிராகரித்திருப்பதாகவும் பா.ஜ.க. டுவிட் செய்துள்ளது. இதுபோன்ற விமர்சனங்கள், பதில் கருத்துக்களால் கர்நாடக தேர்தல் களம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.

Label