OUR CLIENTS
கோயில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
கோயில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை Posted on 26-Apr-2018 கோயில் பூட்டை உடைத்து  நகை பணம் கொள்ளை

வாணியம்பாடி, ஏப் 26-

வாணியம்பாடி அருகே நாராயணபுரம் பகுதியில் சாலை ஓரம் அமைந்துள்ளது நாகலம்மாள் கோயில். இந்த கோயிலில் மாணிக்க அம்மாள் என்பவர் தினந்தோரம் காலை மற்றும் மாலை நேரத்தில் கோயில் சுத்தம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை கோயில் சுத்தம் செய்ய வந்த போது கோயில் திறந்து நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கேட்டின் பூட்டு உடைந்த நிலையிலும், அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு தாலிகள் காணமல் போய் இருப்பதும், மேலும் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உடனடியாக கோயில் நிர்வாகி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் கோயில் நிர்வாகி நேரில் வந்து பார்த்து சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர். 
மேலும் அம்மன் கழுத்திலிருந்த 2 தாலிகள், உண்டியலில் காணிக்கை செலுத்திய 5 தாலிகள் மற்றும் உண்டியல் பணம் என மொத்தம் ரூ.1லட்சம் மதிப்பாகும். இந்த கோயிலில் இதுவரை 5 முறை கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது குறிப்படத்தக்கது.

Label