OUR CLIENTS
டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்
டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல் Posted on 26-Apr-2018 டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்

டெல்லி, ஏப். 26-

ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார். 

புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டி தொடர் கடந்த 7&ம் தேதி தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனர். இறுதியில் 4 இடங்கள் பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவர். 

இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்றுவரும் போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. ஆனால் முன்னதாக 
கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்த போது அணியை சிறப்பாக வழிநடத்தி 2 முறை கோப்பையை பெற்று தந்துள்ளார். 

இம்முறை ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வாங்கியது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாகவும் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் கவுதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
 இதையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி 27&ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

Label