OUR CLIENTS
அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணை
அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணை Posted on 27-Apr-2018 அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை, ஏப்.27-

அரசு மருத்து வமனைகளில் பணியாற்ற 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று வழங்கினார். 

பணி நியமன ஆணைகளைப் பெற்ற 1008 பேரில் 242 பேர் உதவி மருத்துவர்கள் 337 பேர் செவிலியர்கள், 308 பேர் மருந்தாளுநர்கள், 90 நுண் கதிர்வீச்சாளர்கள், 21 வட்டார சுகாதார புள்ளியில் அலுவலர்கள் மற்றும் கருணை அடிப்படையில் 10 இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்கள்.சமீப காலத்தில் தமிழ்நாட்டு மக்களை அச்சுறுத்திய பல நோய்களில் இருந்து மக்களை மீட்டெடுததற்கு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரித சிகிச்சைகளும், இரவு பகல் பார்க்காமல் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் தியாக உள்ளத்தோடு ஆற்றிய பணியுதம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி, வயது 29, ஒரு ஏழை தொழிலாளி, அவர் இரண்டு கைகளையும் இழந்தவர். 

அவர் இரண்டு கைகளையும் பொருத்தவேண்டும் என்று அரசிடத்திலே கோரிக்கை வைத்தார்.  மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களும் என்னிடம் கலந்து பேசினார்கள்.  இரண்டு கைகளையும் அவருக்கு பொருத்துவதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று என்னிடம் கேட்டார். இது சாத்தியமா என்று கேட்டேன். நிச்சயமாக சாத்தியம் ஆக்க முடியும்.  நம்முடைய மருத்துவர்கள் சிறந்த மருத்துவர்கள், வல்லுநர்கள், நிச்சயமாக இதை நிறைவேற்றுவார்கள் என்று என்னிடத்திலே உறுதியளித்தார்.  இதன் பொருட்டு இன்றைக்கு இரண்டு கைகளையும் இழந்த அவருக்கு, இறந்த ஒருவரின் உடலிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து பொருத்தி இன்றைக்கு இரண்டு மாதம் ஆகிறது. 

இன்றைக்கு சிறப்பாக இரண்டு கைகளையும் பயன்படுத்தக்கூடிய நிலையில் அவர் இருக்கின்றார்.  இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனையிலே உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மூலமாக இரண்டு கைகளையும் பொருத்தி வெற்றி கண்ட மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.  ஆகவே, இந்த சாதனையை செய்த அந்த மருத்துவக் குழுவிற்கு உங்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நியமன ஆணைகள் பெறுகின்றவர்கள் சிறந்த முறையில் பணியாற்றி மக்களிடத்தில் நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார். நேற்று, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயக்குமார், சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு, மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Label