OUR CLIENTS
சீனத் திடீர் பயணம் ஏன்? பிரதமர் மோடி வெளியிட்ட சிறப்பு அறிக்கை
சீனத் திடீர் பயணம் ஏன்? பிரதமர் மோடி வெளியிட்ட சிறப்பு அறிக்கை Posted on 27-Apr-2018 சீனத் திடீர் பயணம் ஏன்?  பிரதமர் மோடி வெளியிட்ட சிறப்பு அறிக்கை

புதுடில்லி, ஏப்.27-

இந்திய - சீன உறவு குறித்து நீண்ட கால கண்ணோட்ட அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்த பெய்ஜிங் நகருக்குச் செல்வதாக இந்தியப் பிரதமர் நேற்று அறிவித்துள்ளார்.

பிரதம அமைச்சர் நரேந்திர மோடி சீனாவில் உள்ள உஹான் நகருக்கு 2018, ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.அரசுமுறைப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: “நான் சீனாவின் உஹான் நகரில் ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறேன். அங்கு சீன அதிபர் மேதகு ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசுகிறேன். அதிபர் ஷியும் நானும் இரு தரப்பு விவகாரங்கள், உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிப்போம். பரஸ்பரம் நாங்கள் மேற்கொண்டுள்ள தொலைநோக்குகள், மேம்பாட்டுக்குத்தேவையான முன்னுரிமைகள் ஆகியவை குறித்து இருவரும் விவாதிப்போம்.

அத்துடன், உலக அளவில் நடப்புகாலத்திலும், எதிர்காலத்திலும் ஏற்படும் சூழ்நிலை விஷயத்தில் இரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள பார்வைகள், முக்கியத்துவங்கள் குறித்தும் விவாதிப்போம்.
அத்துடன், இந்திய - சீன நல்லுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும்  நீண்டகாலக் கண்ணோட்டத்திலும் உத்திபூர்வமாகவும் விவாதிக்க இருக்கிறோம்” இவ்வாறு  பிரதமர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர்நரேந்திர மோடி நேற்று மாலை சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

Label