OUR CLIENTS
பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் Posted on 27-Apr-2018 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

திருவனந்தபுரம்,ஏப்.27-

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அரசுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்து, தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ரத யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ரத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடந்தது.

இதில், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, சசிதரூர் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரத யாத்திரையை முடித்து வைத்து பேசினார்.மத்தியில் ஆளும் மோடி அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது. கடந்த 4 ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு சீர்குலைந்து போய் விட்டது. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. தற்போது விலை உயர்வில் வரலாறு காணாத சாதனையை பாரதிய ஜனதா அரசு படைத்துள்ளது.மக்கள் நலனில் மோடி அரசுக்கு அக்கறை இல்லை. ஆனால் அவர், உலகநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்கிறார்.

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது முதல் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அரசுக்கு மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள். தகுந்த பாடம் புகட்டுவார்கள்.பாரதிய ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களை மோடி ஒதுக்கி வைத்துள்ளார். அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு நன்மை செய்வதில்லை. 500 பேர் மும்பையில் இருந்து ஐதராபாத் செல்ல ரூ.1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் விடுகிறார்கள்.ஆனால் நாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் சரியான அடிப்படை வசதிகளோ போதுமான ஆசிரியர்களோ இல்லாத நிலை உள்ளது. இவற்றையெல்லாம் அவர், கண்டு கொள்வதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Label