OUR CLIENTS
அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்!
அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்! Posted on 27-Apr-2018 அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்!

சென்னை, ஏப்.27-

அடையாறு ஆற்றில், ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், 52 கோடி ரூபாய் செலவில், திரு.வி.க., மேம்பாலம் முதல், விமான நிலையம் பின்புறம், இரண்டாவது விமான ஓடுபாதை மேம்பாலம் வரை உள்ள, 26.4 கி.மீ., தூரத்திற்கு, நிரந்தர தடுப்பு வேலி அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூரில் துவங்கும், அடையாறு ஆறு, 42 கி.மீ., தூரம் பயணித்து, சென்னை, பட்டினப்பாக்கம் வழியாக கடலில் கலக்கிறது.  மொத்தம், 227 ஊராட்சிகள், ஒன்பது பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகள், சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி என, இந்த பரப்பளவுகளில் பெய்யும் மழைநீர், இந்த ஆற்றில் வடிகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, மறுகால் திறக்கப்பட்டால், இந்த ஆறு வழியாக தான், உபரிநீர் கடலுக்கு செல்லும். கடந்த, 2015ல், இந்த ஆற்றால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு, சென்னை மாநகரத்தை மூழ்கடிக்க காரணமாக அமைந்தது.  இதையடுத்து, கூவம் நதியை முன்மாதிரியாக மாற்ற, மறு சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதை போல, கடுமையான ஆக்கிரமிப்பு, கழிவுநீர், குப்பையின் பிடியில் சிக்கியுள்ள, அடையாறு ஆற்றையும், மறு சீரமைக்கும் பணியில், சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை, களம் இறங்கியது.  இதில், மணப்பாக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை, ஆற்றின் கரையோரம், மிதிவண்டி பாதை, நடைபாதை, ஐந்து இடங்களில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சுற்றுச்சூழல் பூங்கா, ஆற்றின் இருபக்கமும் தடுப்பு வேலி, நிரூற்றுகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

இதற்காக, அடையாறு ஆற்றில் உள்ள, 9,687 சட்ட விரோத ஆக்கிரமிப்புகளில், 5,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன.  மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க, ஆற்றில், 26.4 கி.மீ., தொலைவில், இரண்டு பக்கமும் நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாகநராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  அடையாறு ஆற்றில், முதல்கட்டமாக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  மீண்டும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க, 51.69 கோடி ரூபாயில், திரு.வி.க., மேம்பாலம் முதல், மீனம்பாக்கம் விமான ஓடுபாதை மேம்பாலம் வரை, 26.4 கி.மீ., தொலைவில், இரண்டு பக்கமும் நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, எட்டு சிப்பங்களாக, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மே மாத இறுதியில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கும். வரும் பருவமழைக்கு முன், பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label