OUR CLIENTS
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார் Posted on 29-Apr-2018 11 எம்.எல்.ஏ.க்கள்  வழக்கு நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை,  ஏப்.30- 

நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாரதிதாசனின் 128வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவர் திருஉருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற தீர்ப்பை கால்புணர்ச்சியுடன் விமர்சிக்கக் கூடாது என்று கூறினார். மேலும் டிடிவி தினகரனும், திவாகரனும் புதிய கட்சி தொடங்குவதால் மக்களுக்கு எந்த பலனும் ஏற்படபோவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Label