OUR CLIENTS
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் Posted on 29-Apr-2018 திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

திருவண்ணாமலை, ஏப்.30-

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா இன்று களைகட்டியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்ரா பவுர்ணமியும் பிரசித்தி பெற்றது. இன்று சித்ரா பவுர்ணமி விழா விமர்சையாக நடக்கிறது. அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைக்கு பிறகு, தரிசனத்துக்காக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 1 கி.மீ தூரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

ரூ.50 தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களும் நீண்டநேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, நாளை காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் பக்தர்கள் அதிகாலை முதலே அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று இரவு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக அண்ணாமலையார் கோயிலில் நடைதிறப்பு நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று பகல் நடை அடைப்பு இல்லை. இரவு 11 மணி வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயில் பிரகாரத்துக்குள் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமும், 64 இடங்களில் குடிநீர் குழாய், 24 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 15 இடங்களில் ஆம்புலன்ஸ், 9 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் மீட்பு பணியை மேற்கொள்ள 6பைக் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்களும், நகரின் வெளியே 42 இடங்களில் கார்கள் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

Label