OUR CLIENTS
கற்கும் பாரதம் திட்டத்திற்கான எழுத்தறிவு தோ்வு
கற்கும் பாரதம் திட்டத்திற்கான எழுத்தறிவு தோ்வு Posted on 18-Aug-2016 கற்கும் பாரதம் திட்டத்திற்கான எழுத்தறிவு தோ்வு

சேலம்:
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழகத்தில், பெண்கள் எழுத்தறிவு விகிதம் 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் கற்கும் பாரதம் என்ற எழுத்தறிவுத் திட்டம், கடந்த 2009ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இத்திட்டத்தின்படி, 14 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட எழுத, படிக்கத் தெரியாத பெண்களுக்கு எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.    சேலம், தர்மபுரி, ஈரோடு, அரியலுhர், பெரம்பலுhர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.  சேலம் மாவட்டத்தில் மட்டும் 3.51 லட்சம் பெண்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  எழுத்தறிவற்றோருக்கு பயிற்சி வழங்குவதற்காக +2 முடித்த இளைஞர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதில் பயிற்சி பெற்றவரின் திறன் அறிய, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி,  இத்திட்டம் அமலில் உள்ள 9 மாவட்டங்களிலும் வரும் ஆகஸ்ட் 21, 2016 தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடக்கிறது.  150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.  கற்கும் பாரதம் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  கற்போர்களுக்கு வசதியான நேரத்தில் வந்து மூன்று மணி நேரம் தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டு உள்ளது.  தேர்வுக்குத் தேவையான விடைத்தாள், பேனா ஆகியவை கற்கும் பாரதம் திட்டம் சார்பில் தேர்வு நாளன்று வழங்கப்படும்.  சேலம் மாவட்டத்தில் இத்தேர்வு எழுத இதுவரை சுமார் 8000 பேர் பதிவு செய்து தேர்வு எழுத உள்ளனர்.


சான்றிதழ் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வினை மத்திய அரசின் சார்பாக தேசிய திறந்த வெளி பள்ளியும், தேசிய எழுத்தறிவு இயக்கமும் இணைந்து அமைத்து நடத்துகின்றது.  இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு  "அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்"" என்று தேசிய திறந்த வெளி பள்ளியின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.  இச்சான்றிதழில் மூன்று வகையாக வெற்றியை குறிப்பிடுவர். மொத்தம் வாசித்தலுக்கு 50, எழுதுவதற்கு 50, எண்ணறிவுக்கு 50 என்ற மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவர்.  இதில் 60 % மேல் மதிப்பெண் பெற்றால் "A" ""நன்று"" எனவும், 40 % முதல் 59 % வரை மதிப்பெண் பெற்றால்  "B"  "திருப்தி" எனவும், 40 % கீழ் பெற்றால்  "C"  "முயற்சி தேவை" என்றும் குறிப்பிடுவார்கள்.  ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளில் 294447 பேர் தேர்வு எழுதி மத்திய அரசின் தேசிய திறந்தவெளி பள்ளி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நெறிமுறைகளின்படி சான்றிதழ்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.  இத்தேர்வானது, எதிர் வரும் 21.8.2016 அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து 385 ஊராட்சிகளிலும் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கற்கும் பாரதம் திட்ட மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது  பள்ளியில் இடைநின்றவர்கள் கற்கும் பாரதம் திட்ட மையங்களில் படித்து பயன் பெறுவோர் மட்டுமல்லாமல் 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளியில் இடையில் நின்றவர்கள், ஓரளவிற்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும் இத்தேர்வை எழுதி பயன் பெறலாம் பதிவு செய்தல் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வை எழுதுகிறவர்கள் பதிவு செய்ய வேண்டும்.  பதிவு செய்ய விரும்புபவர்கள் அந்தந்த ஊராட்சிகளில் கற்கும் பாரதம் திட்ட மையப் பொறுப்பாளர்கள், துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொடர்பு கொண்டு 15.8.2016 முதல் பதிவு செய்யலாம்.  பதிவு செய்ய இயலாதவர்கள் 21.8.2016 அன்று நேரடியாக மையம் அமைந்துள்ள பள்ளிகளில் பதிவு செய்து தேர்வு எழுதலாம். மேலும் விபரங்களுக்கு மேலும் இது சம்மந்தமாக விபரங்கள் தேவைப்பட்டால் சேலம்  கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர்கள், மாவட்ட/ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மையப் பொறுப்பாளர்கள் போன்றவர்களிடம் தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Label