OUR CLIENTS
காவிரி நீர் பிரச்சனை: முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கர்
காவிரி நீர் பிரச்சனை: முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கர் Posted on 30-Apr-2018 காவிரி நீர் பிரச்சனை: முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை, ஏப்ரல் 30-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றியச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வீட்டு வசதி வாரிய தலைவருமான வைரமுத்து, எம்.எல்.ஏ. ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ நாயகம், அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை போராடி கெஜட்டில் வெளிவரச்செய்தார். கெஜட்டில் வெளிவந்ததால் தான், இன்று உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கொஞ்சம் கால தாமதம் ஆனபோதிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால், மத்திய அரசு விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும். அதன்மூலம் காவிரி பிரச்சினைக்கு நிரந் தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவர் ஆட்சியின் போது, சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதுகுறித்து நாங்கள் எல்லாம் அறிந்தபோதும், ஜெயலலிதாவிடம் கூறுவதற்கு பயந்தோம். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த குடும்பம் கொள்ளை அடித்து பணத்தை சேர்த்தது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. அதில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா குடும்பம் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. இதற்கு கார ணம் அ.தி.மு.க. தொண்டர் கள் தான்.

ஆரம்பத்தில் வேகமாக இருந்த தினகரனின் வேகம் குறைந்து விட்டது. தற் போது அவருக்கு ஓய்வு கிடைத்து வருகிறது. முன்பு தினமும் பேட்டி கொடுத்து வந்த தினகரனை தற்போது டிவியில் தேட வேண்டியுள் ளது. ஒன்றாக இருந்த தின கரன், திவாகரன் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரே துறையாக மக்கள் நல் வாழ்வுத்துறை விளங்குகி றது. இதனால் இந்த துறை தேசிய அளவில் பல விருது களை பெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறி அவரை பதவி விலகச் சொல்வது தவறானதாகும். ஜெயலலிதாவின் ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.  இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குரங்கணி தீ விபத்து குறித்து ஒருநபர் கமிசன் விசாரணை நடத்தி உள்ளது. விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும். அதன் பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால், மத்திய அரசுடன் இணக்கமாக செயல் படுகிறோம். தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தைல மரங்களுக்கு பதில் முந்திரி மரங்கள் நடவு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட சிறு பான்மை நலப்பிரிவு செய லாளர் லியாகத்அலி, அறந் தாங்கி வடக்கு ஒன்றியச் செயலாளர் வேலாயுதம், ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர் கூத் தையா, புதுக்கோட்டை நகரச் செயலாளர் பாஸ் கர், நிர்வாகிகள் சோலை ராஜ், மண்டலமுத்து, முருகா னந்தம், வைத்திலிங்கம், ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Label