OUR CLIENTS
திருமயம் பகுதியில் வறட்சியால் காய்ந்து கருகி நிற்கும் மரங்கள்
திருமயம் பகுதியில் வறட்சியால் காய்ந்து கருகி நிற்கும் மரங்கள் Posted on 30-Apr-2018 திருமயம் பகுதியில் வறட்சியால் காய்ந்து கருகி நிற்கும் மரங்கள்

திருமயம் , மே 1-

அரிமளம், திருமயம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் இலைகளை உதிர்த்து  மரங்கள், புதர்செடிகள் மொட்டையாக நிற்கின்றன.

கால்நடைகளுக்கு தீவனதட்டுபாடு ஒருபுறம் இருக்க ஒண்டகூட நிழல் இல்லாததால் கால்நடைகள் மெலிந்து இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம், திருமயம் பகுதிகள் அதிகளவு வன, விவசாய நிலங்களை கொண்டவைகளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் விவசாயத்துடன்ஆடு, மாடுகள் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மழையின் அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அரிமளம், திருமயம் பகுதியில் அதிகம் இருப்பதால் வசந்த காலத்தில் கூட நீர்நிலைகள் வறண்டு நீறின்றி காணப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள அனைத்து கண்மாய், ஊரணி, ஆறுகள் நீரின்றி வறண்டு போயின. இதனால் கால்நடைகள் குடிக்ககூட நீரின்றி பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பூமிவறண்டு போனதால் மரங்கள், புதர்செடிகள் இலைகளை உதிர்த்து இலைகளின்றி மொட்டையாக பாலைவனமரம் போல் காட்சியளிக்கிறது.

 இதனால் கோடைவெயிலினால் காற்று சூடாகி வளிமண்டலம் அதிகவெப்பத்துடன் அனல் காற்று வீசுகிறது. மரங்களும் இழைகளின்றி உள்ளதால் கால்நடைகள் ஒண்ட கூட நிழல் இல்லாமலும் மேய்ச்சலுக்கு தீவனம், குடிக்க நீரில்லாமலும் கால்நடைகள் மெலிந்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலும் அரிமளம் பகுதியில் கால்நடைகள் அரிமளம் தைலமரகாட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வதால் காட்டுப்பகுதியில் நீர்தொட்டிகள் அமைத்து நீர்நிரப்புவதன் மூலம் கால்நடைகள் தாகம் தீர்ப்பதுடன் காட்டுக்குள் உள்ள வன விலங்குகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். 

இதனால் வன விலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் வந்து விபத்தில் சிக்குவது, நாய்களுக்கு இரையாவது தடுக்கப்படும் என்றனர். எனவே அரிமளம், திருமயம் வன பகுதிகளில் கடும் வற்டசி நிலவுவதால் மாவட்ட நிர்வாகம் வன விலங்குகள், கால்நடைகளை காப்பாற்ற விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Label