OUR CLIENTS
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : முருகன், கருப்பசாமிக்கு மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : முருகன், கருப்பசாமிக்கு மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல் Posted on 30-Apr-2018 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : முருகன், கருப்பசாமிக்கு மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

மதுரை, மே 1-

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய  விசாரணையில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் முருகனை பொறி வைத்துப்பிடித்தனர். கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இருவரையும் தங்கள் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கருப்புசாமி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

காவல் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். நீதிபதி விடுமுறை என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஜே.எம். நீதிபதி பரமசிவம் வீட்டில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து இருவரையும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Label