OUR CLIENTS
தேசிய கார் பந்தயம்: கில் மீண்டும் சாம்பியன்
தேசிய கார் பந்தயம்: கில் மீண்டும் சாம்பியன் Posted on 30-Apr-2018 தேசிய கார் பந்தயம்: கில் மீண்டும் சாம்பியன்

சென்னை

தேசிய கார் பந்தய போட்டியில் நடப்புச் சாம்பியன் கவுரவ் கில் மீண்டும் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.

மெட்ராஸ் மோட்டார் விளையாட்டு சங்கமும், இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய இத்தொடர், இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் மோட்டார் பந்தய மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரர்களைக் கொண்ட 31 குழுக்கள் பங்கேற்றன. தொடக்க நாளில் போட்டியின் மொத்த தூரத்தை கடக்க, கில் 44 நிமிடம் 35 நொடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார். இரண்டாவது நாளாக நேற்று நடந்த போட்டியில் டீம் மகேந்திரா அணியின் கில் மற்றும் இணை ஓட்டுநர் மூசா ஷெரீப் சிறப்பாக செயல்பட்டு  1 மணி, 28 நிமிடம், 43.1 விநாடியில் இலக்கை எட்டினர். அமித்ரஜித் கோஷ் (1:30:39.6) 2வது இடம் பிடித்தார்.

Label