OUR CLIENTS
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 11-வது முறையாக கோப்பையை முத்தமிட்டார் நடால்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 11-வது முறையாக கோப்பையை முத்தமிட்டார் நடால் Posted on 30-Apr-2018 பார்சிலோனா ஓபன் டென்னிஸ்:  11-வது முறையாக கோப்பையை முத்தமிட்டார் நடால்

பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில், நம்பர் 1 வீரர் ரபேல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இறுதிப் போட்டியில் கிரேக்க நாட்டை சேர்ந்த 19வயது இளம் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசுடன் (63வது ரேங்க்) நேற்று மோதிய நடால், சிட்சிபாசின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்ற அவர், அதே வேகத்துடன் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று பார்சிலோனா ஓபனில் 11வது முறையாக கோப்பையை முத்தமிட்டு அசத்தினார்.

களிமண் தரை மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் முடிசூடா சக்ரவர்த்தியாகவே திகழும் நடால், இவ்வகை மைதானங்களில் தனது 401வது வெற்றியை நேற்று பதிவு செய்தார் (வெற்றி சதவீதம் 91.9). மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் 11 முறையும், ரோலண்ட் கேரோசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் 10 முறையும் பட்டம் வென்றுள்ள அவர், பார்சிலோனா ஓபனில் 11வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தார். 

Label