OUR CLIENTS
போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ : பிளிஸ்கோவா சாம்பியன்
போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ : பிளிஸ்கோவா சாம்பியன் Posted on 30-Apr-2018 போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ : பிளிஸ்கோவா சாம்பியன்

ஸ்டட்கர்ட்

ஜெர்மனியில் நடைபெற்ற போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த தகுதிநிலை வீராங்கனை கோகோ வாண்டெவெகேவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா (5வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 7-6 (7-2) என டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் வாண்டெவெகேவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்களில் 1 மணி, 56 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். நடப்பு சீசனில் பிளிஸ்கோவா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Label