OUR CLIENTS
சீனா, பாக்.குடன் இந்தியா ராணுவ பயிற்சி
சீனா, பாக்.குடன் இந்தியா ராணுவ பயிற்சி Posted on 30-Apr-2018 சீனா, பாக்.குடன் இந்தியா ராணுவ பயிற்சி

புதுடெல்லி 

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து வரும் செப்டம்பரில் இந்தியா ராணுவ பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதில்லை. இதேபோல சீனாவுடன் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ராணுவப் பயிற்சி டோக்லாம் பிரச்னையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்த இருநாடுகளுடன் இணைந்து இந்தியா வரும் செப்டம்பர் மாதத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளது. 
கடந்த வாரத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில், இந்த ராணுவ பயிற்சியில் இணைவதற்கான ஒப்புதலை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label