OUR CLIENTS
குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை: தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை
குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை: தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை Posted on 01-May-2018 குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை: தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை

சென்னை

குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்து உள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிக்கை:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குடியரசுத்தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக செய்திகள் வந்துள்ளன. தமிழ் மொழிக்கு மட்டுமே 2004ம் ஆண்டில் செம்மொழித் தகுதி வழங்கப் பெற்றது.  இதனைத் தொடர்ந்து,  கர்நாடக மாநிலம் மைசூரில் மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் வழியாக செயல்பட்டு வந்த தமிழ்ப் பிரிவு பிரிக்கப்பட்டு சென்னையில் தமிழுக்கென தனி நிறுவனமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் 2008ம் ஆண்டு மே மாதம் முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.   இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்நிறுவனத்தால் பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது, அயல்நாட்டவர், அயல்நாடு வாழ் இந்தியர், இளம் அறிஞர் விருது என 2016 ஆண்டு வரை 66 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.    

ஆண்டுதோறும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வழியாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு,  இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய தெரிவுக் குழுவால் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விருதாளர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து 2017ம் ஆண்டில் மேற்கண்ட விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளன.

2016-17ம் ஆண்டு விருதுகளுக்கான விளம்பரங்கள் தேசிய மற்றும் மாநில  செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, விருதுகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.  இதற்கான தெரிவுக் குழு நியமிக்கப்பட்டு விருதாளர்களை தேர்ந்தெடுக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது மட்டுமன்றி, தன்னாட்சி  அளிக்கப்பெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுவதால்  குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

Label