OUR CLIENTS
நியாயமான விசாரணை நடக்கவில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாக போலீசார்: தீக்காயம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் குமுறல்
நியாயமான விசாரணை நடக்கவில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாக போலீசார்: தீக்காயம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் குமுறல் Posted on 01-May-2018 நியாயமான விசாரணை நடக்கவில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாக போலீசார்: தீக்காயம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் குமுறல்


சென்னை

திருத்தணியில் ஆளும் கட்சி பிரமுகரின் மகளை பெண் கேட்டு சென்றபோது உயிரோடு தீயில் எரிந்த சம்பவத்தில், போலீசார் ஒருதலைபட்சமாக  செயல்படுவதாக பாதிக்கப்பட்ட ராணுவ வீரரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்ட அரக்கோணம் தாலுகா புலியமங்கலம் ஒத்தவடை  தெருவை சேர்ந்த மனோகரன் மகன் ராகேஷ் (26), இவர் ராணுவத்தில் கடற்படை பிரிவில் பணியாற்றுகிறார். இவரும், திருத்தணி அரக்கோணம் சாலையில்  உள்ள முன்னாள் நகரமன்ற தலைவரும், அதிமுக நகர செயலாளருமான டி.சவுந்தரராஜனின் மகள் அஸ்வினி (22) என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், அஸ்வினிக்கு வேறு மாப்பிள்ளை நிச்சயிக்கப்படுவதை அறிந்து ராகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சவுந்தர்ராஜன் வீட்டுக்கு பெண் கேட்க  சென்றார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராகேஷ் உடலில் மர்மமான முறையில் தீ விபத்தில் சிக்கினார். இதனையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல், பின்னர், பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவத்தில், ராகேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.சவுந்தரராஜன் மீது மட்டும் 341 மற்றும் 323 ஆகிய பிரிவின் கீழ் முறைகேடாக தடுப்பு  செய்தல் மற்றும் தன்னிச்சையாக காயம் விளைவித்தல் மற்றும் 506 (1) குற்றமூரு மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதே நேரத்தில் ராகேஷ் மீது 309 தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால்  போலீசாருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும். டி.சவுந்தரராஜன் மீது சாதராண குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ராகேஷின் குடும்பத்தினர்  குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திருத்தணி தனி போலீசார் எங்கள் குடும்பத்தினரை தினமும் வந்து பெண்களை விசாரணை என்ற  பெரியவில் அச்சுறுத்துவதாககும் அவர்கள் கூறுகின்றனர்.எனவே, மத்திய அரசு ஊழியரான ராணுவ வீரருக்கு நியாயம் கிடைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றூ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label