OUR CLIENTS
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் Posted on 01-May-2018 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

டெல்லி

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

வரும் அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள மத்திய அரசு, மாநில முதலமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளார்.

Label