OUR CLIENTS
இரு கம்யூனிஸ்ட்கள் இணைவது காலத்தின் கட்டாயம் : சுதாகர் ரெட்டி தகவல்
இரு கம்யூனிஸ்ட்கள் இணைவது காலத்தின் கட்டாயம் : சுதாகர் ரெட்டி தகவல் Posted on 01-May-2018 இரு கம்யூனிஸ்ட்கள் இணைவது காலத்தின் கட்டாயம் : சுதாகர் ரெட்டி தகவல்

கொல்லம்:

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டியது அவசியம் என்றார். இணைப்பு பேச்சுவார்த்தையை உடனே தொடங்காவிட்டாலும் அதனை காலவரையின்றி ஒத்திவைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். 

பேச்சுவார்த்தையை உடனே தொடங்கினால் காலம் வரும் போது இருகட்சிகளும் ஒன்றாகிவிடும் என்பது அவரது நம்பிக்கை. காங்கிரஸ் உள்ளிட்ட வலதுசாரிகளுடன் உடன்பாடு கூடாது கொள்கை முடிவு என்றாலும், மதவாத சக்திகளை முறியடிக்க எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி தவிர்க்க இயலாதது என்றும் சுதாகர் ரெட்டி குறிப்பிட்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் காலத்தின் தேவை கருதி காங்கிரஸிடன் கூட்டணி காணும் என்றும் அவர் தெரிவித்தார்.

Label